திருஅச்சிறுபாக்கம்

இறைவர் : பாக்கபுரேசர், ஆட்சியீசுவரர்
இறைவி : இளங்கிளியம்மை, சுந்தரநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : சங்குதீர்த்தம்

பெரிய கோயில். இரு சந்நிதிகள். 5 நிலை இராசகோபுரம். நேரே இருப்பது பாண்டியன் எடுத்த உமையம்மையுடன் உடை உமையாச்சீசுரர் கோயில். வடக்கில் சரக்கொன்றை மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் அம்பாளுடன் எழுந்தருளி உள்ளார். சித்திரையில் பிரமோற்சவம். சித்திரைச் சித்திரையில் தீர்த்தோற்சவம். சித்திரைச் சதையத்தையும், வைகாசி மகத்தையும் முன்னிட்டு இருமுறை பெருந்திருவிழா. பிரதோஷம், கார்த்திகை சிறப்புத் தினங்கள். அறுபத்து மூவர் சிலா. ஐம்பொன் திருமேனிகள் உண்டு.

தொண்டைநாடு : 29