தொகை அடியார்கள்

திருதொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தைப் பாடுவதற்கு திருவாரூர்த் தியாகேசப்பெருமான், அவ்வூர் கோயிலில் உள்ள தேவாசிரிய மண்டபத்தின் முன் நின்று அடியவர்களை வணங்கிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு எடுத்துக் கொடுத்து அருளிய “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்னும் அடியை வைத்தே, பெரியபுராணத்துக்கு ஆதாரமாகிய திருத்தொகையை நாயனார் பாடியருளினார். திருவாரூரில் இருந்தே தில்லைவாழ் அந்தணர்களை நினைத்து, அறுபான்மும்மைத் தனியடியார்கள், ஒன்பான் தொகையடியார்களைப் போற்றி வணங்கியது குறிப்பிடத்தக்கது.

தொகை அடியார்களில், தில்லைவாழ் அந்தணர்க்கு சித்திரை மாதம் முதல் நாளிலும், ஏனைய எண்மருக்கு பங்குனி மாதம் கடைசி நாளிலும் குருபூசை செய்வது வழக்கம்.