திருநனிப்பள்ளி (புஞ்சை)

இறைவர் : நற்றுணையப்பர்
இறைவி : மலையான்மடந்தை, பர்வதபத்தினி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3
தீர்த்தம் : சொர்ண தீர்த்தம்

சிறிய கோயில். சம்பந்தரின் தாயாராகிய பகவதியார் அவதாரம் செய்த தலம். இங்கே அம்பாள் சந்நிதிகள் இரண்டு உள. தெற்கு நோக்கிய சந்நிதியில் மலையான்மடந்தையும், மேற்கு நோக்கிய சந்நிதியில் பர்வதராஜபுத்திரியும் எழுந்தருளி உள்ளனர். சிவன் அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய தலம். அகத்தியர் திருமேனி கோயிலில் உண்டு. சுவாமி கோயில் கோடிவட்டம் பிரபல்யமானது. ஆவுடையார் கொடுங்கை திருவீழிமிழலை வௌவால் நந்தி மண்டபம் முதலியவற்றோடு ஒத்த சிறப்புடையன. இத்தலம் முன் பாலையாய் இருந்தது. சம்பந்தர் பாடி நெய்தல் ஆக்கினார்.

மயிலாடுதுறை இருப்புப்பாதை நிலையத்துக்கு வடக்கே 13 கி.மீ. வழியில் 6 கி.மீ இல் திருவிளநகரும், கி.மீ இல் பொன்பள்ளியும் உள்ளன. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 43