திருப்புறவார் பனங்காட்டூர்

இறைவர் : நேத்திரேத்தக ஈசுவரர் (கண்கொடுத்த நாதர்)
இறைவி : புறவம்மை

பதிகம் : சம்பந்தர் 1

அளவான கோயில். 5 நிலை இராசகோபுரம். கோயிலின் முன்புறம் அலங்கார மண்டபம். பிராகாரத்தின் தென்மேற்கில் பிள்ளையார் கோயிலும், வடமேற்கில் அம்பாள் கோயிலும் உள. உயரமான சுற்றுமதில். அதில் நந்திகள் வைத்துக் கட்டப்பட்டுள்ளன. ஆண்பனை, பெண்பனை, வடலி இவை ஒரே இடத்தில் பிராகாரத்தில் நிற்கின்றன. இவற்றைச் சுற்றி மேடை உண்டு. அபயம் என்று வந்த புறாவிற்கு அடைக்கலம் கொடுத்த சிபிச்சக்கர-வர்த்திக்கு இறைவன் காட்சி கொடுத்து தலம். சித்திரை மாதம் தோறும் முதல் ஏழு நாள்கள் காலையில் கதிரவன் கதிர்கள் முதலில் இறைவன் மேலும், பின்னர் இறைவி மேலும் வீழ்கின்றன.

பயண வசதிகள் உண்டு. செங்கல்பட்டு-விழுப்புரம் சாலையில் முண்டியப்பாக்கதில் இருந்து 3 கி.மீ.

நடுநாடு : 20