திருநாகேச்சரம்

இறைவர் : நாகேச்சரம், சண்பகாரண்யர்
இறைவி : குன்றாமுலைநாயகி, கிரிகுஜாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 3 + சுந்தரர் 1 = ஆக 6
தீர்த்தம் : சூரியபுஷ்கரணி

கோயில் பெரிது. இராகுத் தலம். இராகு இரு தேவியருடன் தனிச் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். இங்குள்ள இராகு பகவானுக்கு பால் அபிடேகம் செய்து வழிபட்டால் ராகு தோஷம், சர்ப்ப தோஷம், திருமண தோஷம் நிவர்த்தியாகும். அபிஷேகம் செய்யும் பால் நீல நிறமாக மாறுவது பகவானின் தனிப் பெரும் சிறப்பு. நடராஜர் சந்நிதிக்கு எதிரே (1) அழகாம்பிகை (சேக்கிழாரின் தாயார்) (2) சேக்கிழார் (3) பாலறுவாயர் (சேக்கிழாரின் தம்பியார்) முதலியோரதும், (1) பரவையார் (2) சுந்தரர் (3) சம்பந்தர் (4) நாவுக்கரசர் (5) மாணிக்கவாசகர் முதலியோரதும் தனிச் சந்நிதிகள் உண்டு. நான்கு புறமும் நான்கு பெரிய கோபுரங்கள். சேக்கிழாரின் தாயார் அவதரித்த ஊர். அதனால் அவர் இல்லத்தை தமது ஆன்மார்த்த தலமாகக் கொண்டார். அருள்மொழித்தேவர் தாம் பிறந்த தொண்டை நாட்டிலே, குன்றத்தூரிலே, தமக்குச் சொந்தமான நிலத்திலே, தமது ஆன்மார்த்த நாயகராகிய சோழநாட்டு நாகேச்சரத்து இறைவருக்கு, கோயிலும், திருக்குளமும், திருமட வளாகமும் அமைத்து, நிறுவிய திருத்தலம்.   

பயண வசதிகள் உண்டு. சென்னையில் இருந்து நேரடிப் பேருந்து சேவை உண்டு. சென்னைக்கும் வட திருநாகேச்சரத்தில் (??).

சோழநாடு, காவிரி தென்கரை : 29