திருக்கொள்ளிக்காடு

இறைவர் : அக்னீஸ்வரர்
இறைவி : பஞ்சின்மெல்லடியாள்

பதிகம் : சம்பந்தர் 1

சிறிய கோயில். மேற்கு பார்த்த சந்நிதி. சுவாமியும், அம்பாளும் சிறிய திருமேனிகள். திருநள்ளாற்றில் போலவே இங்கும் சனிபகவான் சந்நிதி விசேஷம். அங்கு பகவான் தொடரும் போதும், இங்கு நீங்கும் போதும் விசேட பூசனைகள் நிகழும் என்பர்.

திருநெல்லிக்காவில் இருந்து 4 கி.மீ நடந்து செல்லவேண்டும். திருநெல்லிக்காவுக்கு பயண வசதிகள் உண்டு. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 14 கி.மீ. ரயில், பேருந்து பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 115