திருநெல்லிக்கா

இறைவர் : நெல்லிவன நாதர்
இறைவி : மங்களநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : நெல்லி
தீர்த்தம் : பிரமதீர்த்தம், சூரியதீர்த்தம்

கோயில் சிறிது. மேற்கு பார்த்த சந்நிதி. ஐந்து நிலை இராசகோபுரம். நெல்லிவனநாதர் கோயில் நெல்லி மரத்தின்கீழ் உள்ளது. அம்மன் சந்நிதி விசேடம். பிரமோற்சவம் சித்திரையில். கோயிலுக்கு முன்னால் திருக்குளம். தக்கன் யாகத்தில் சூரியன் தாழ் இழந்த பல், கண்களை இத்தலத்தில் சிவனைப் பூசித்துப் பெற்றான். மாசி மாதம் 18 உ முதல் 7 நாள் வரையும், ஐப்பசித் தேய்பிறையில், சதுர்த்தி முதல் 4 நாள் சூரியன் சுவாமியை பூசை செய்த ஐதீகப்பட சுவாமிமேல் சூரிய ஒளி படரும். விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சங்கரசன்மன் என்கின்ற பிராமணச் சிறுவன் இங்கு பிரதோஷவிரதம் இருந்தான். சோழனுக்கு திருநெல்லிக்காவலின் சிறப்பு உரைத்து அவனுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றான். இங்குள்ள நெல்லிமரத்தின் காய்கள் சுவாமிக்கு மட்டுமே படைத்தற் குரியன. முன் நெல்லிக் காடாக இருந்தமையால் இத்தலத்துக்கு இப்பெயராயிற்று.

திருவாரூர்-திருமுறைப்பாண்டி இருப்புப்பாதையில் திருநெல்லிக்கா என்ற இருப்புப்பாதை நிலையத்திலிருந்து ½ கி.மீ. திருவாரூரிலிருந்து சாலை வழியாக பேருந்தில் 14 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 117