திருக்காறாயில்

இறைவர் : கண்ணாயிரநாதர்
இறைவி : கயிலைநாயகி
பிள்ளையார் : கடுக்காய் பிள்ளையார்

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்

பெரிய கோயில். கருங்கல் திருப்பணி. சிறிய மரகதலிங்கம். ஏழு விடங்கத் தலங்களில் இது ஆதிவிடங்கத் தலம். தியாகேசர் குக்குட நடனம் ஆடுகின்றார். புரட்டாதி முழுநிலா நாளில், தேவேந்திரனும், முசுகுந்தச் சக்கரவர்த்தியும் சேர்ந்து வழிபடுவது இன்றும் நடைபெறுகிறது. வணிகன் ஒருவன் குறைந்த வரி கட்ட, சாதிக்காய் மூடைகளை, கடுக்காய் மூடைகள் எனப் பொய் சொன்னான். பிள்ளையார் அருளினால் சாதிக்காய்கள், கடுக்காய்களாக மாறின. இந்நிகழ்ச்சியைக் கண்டு அஞ்சிய வியாபாரி வேண்ட, பிள்ளையார் அருளினால் கடுக்காய்கள் மீண்டும் சாதிக்காய்கள் ஆயின. இதனால் அப் பிள்ளையாருக்கு இப்பெயர் உண்டாயிற்று.

திருநாட்டியத்தான்குடி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து தென்-கிழக்கே 6 கி.மீ. திருவாரூக்கு தெற்கே 13 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 119