திருக்கொண்டீச்சரம்

இறைவர் : பசுபதிநாதர்
இறைவி : சாந்தநாயகி

பதிகம் : அப்பர் 2

சிறிய கோயில். சந்நிதியில் இடதுபுறம் திருக்குளம் உண்டு. கோயிலைச் சுற்றி அகழி ஒன்று உண்டு. உமாதேவியார் பசு வடிவில் பூசிக்க வந்து, மண்ணைக் கொம்பினால் தோண்ட, அங்கே மறைந்திருந்த இலிங்கத்தின் மீது கொம்பு பட்டு, இரத்தம் பீற, பசு தன் பாலை இட்டு, வடுவை மாற்றி வழிபட்டார். இலிங்கத்தில் இன்றும் வடு இருக்கிறது.

மயிலாடுதுறை-திருவாரூர் மார்க்கம், நன்னிலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2 கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 72