திருக்குருகாவூர் (வெள்ளடை)

இறைவர் : வெள்ளடையப்பர்
இறைவி : காவியங்கண்ணி, நீலோற்பல விசாலாட்சி

பதிகம் : சம்பந்தர் 1 + சுந்தரர் 1 = ஆக 2

சிறிய கோயில். சுந்தரருக்கும், அடியார்க்கும், சீகாழியில் இருந்து இங்கு வந்தபோது, சிவபெருமான் கட்டமுதும், தண்ணீரும் அருளிய தலம். இவ்விழா சித்திரை பௌர்ணமி அன்று நிகழ்கிறது. கோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருக்கும் நீர், தை அமாவாசையில் அன்று பாலாக மாறுகின்றது என்பர். வெள்ளடை – பொதிசோறு – தயிர்சாதம். சம்பந்தர் தை அமாவாசையில் அன்று, சீகாழியில் இருந்து இங்கு எழுந்தருளுகிறார். தென்திருமுல்லைவாயிலுக்கு போகும் வழியில் இதனை தரிசிக்கலாம்.

சீகாழியில் இருந்து 6 கி.மீ. பேருந்து பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 13