திருவலம்புரம் (பெரும்பள்ளம்)

இறைவர் : வலம்புரநாதர்
இறைவி : வடுவகிர் கண்ணம்மை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 2 + சுந்தரர் + 1 = ஆக 4
தலமரம் : வன்னி
தீர்த்தம் : காவிரி

சிறிய மாடக்கோயில். மகாவிஷ்ணு தாம் இழந்த சக்கரத்தை மீளப்பெற்ற தலம். ஏரண்ட முனிவர் திருவலஞ்சுழியில் காவேரியில் மூழ்கி, திருவலம்புரத்தில் கரையேறினார். சோழமன்னனும், முனிவரும் இங்கு ஈசனைப் பூசித்தமையால் திருவலம் என்னும் பெயர் உண்டாயிற்று. சிவபெருமான் நாவுக்கரசரை இத்தலத்துக்கு தாமே அழைத்துவந்து காட்சி கொடுத்தார். சிவலிங்கத் திருமேனியின் திருமுடியில் பெரும் பள்ளம் உண்டு. முனிவர் சிரசிலும் பள்ளம் உண்டு. அதனால் இத்தலம் பெரும்பள்ளம் (மேலைப்பள்ளம்) எனவும் வழங்கப்பெறுகிறது.

திருநனிபள்ளியிலிருந்து 6 கி.மீ.தூரம். திருவெண்காட்டிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 4 கி.மீ. பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 44