திருக்கோலக்கா

இறைவர் : திருத்தாளமுடையார், சத்தபுரீசர்
இறைவி : ஓசைகொடுத்தநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + சுந்தரர் 1 = ஆக 2

தாளமுடையார் கோயில் எனப்படுகிறது. சிறிய கோயில். இது சீகாழிக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. இறைவன், இறைவி சந்நிதிகள் தனித்தனியே கிழக்கு நோக்கி உள்ளன. சம்பந்தர் ஞானப்பால் உண்ட அடுத்தநாள் இங்கு எழுந்தருளி தம்முடைய முதல் யாத்திரையை தொடங்கினார். அவர் அங்கு சென்றபொழுது கோயிலின் முன் உள்ள திருக்குளத்தில் பெண்கள் நீராடுவதைப் பார்த்து, “மடையில் வாளை” என்ற பதிகம் பாடினார். 3 வயதுக் குழந்தையாக இருந்த சம்பந்தர் கைகளினாலே ஒத்தறுத்துப் பாடுதலைக் கண்ணுற்ற இறைவர், ஐந்தெழுத்து பொறித்த பொன் தாளம் வழங்க, அது ஓசை இல்லது இருக்கக்கண்ட அம்மையார் ஓசை கொடுக்க, இறைவர் தாளமுடையார் என்றும், இறைவி ஓசைகொடுத்தநாயகி என்றும் அழைக்கப்பெற்றனர்.

சீகாழியிலிருந்து 1 கி.மீ. சீகாழி இருப்புப்பாதை நிலையத்திலிருந்து ½ கி.மீ. சீகாழியிலிருந்து கால் நடையாகவும் செல்லலாம்.

சோழநாடு, காவிரி வடகரை : 15 தலம்