திருக்கைச்சினம்

இறைவர் : கைச்சின்னநாதர்
இறைவி : வெள்ளைநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : இந்திர தீர்த்தம், வச்சிர தீர்த்தம்
தலமரம் : கோங்கு இலவு

அளவான கோயில். 3 நிலை இராச கோபுரம். மதுரை திருஞானசம்பந்தர் ஆதீன அருள் ஆட்சியில் உள்ளது. மூலவருக்கு திருமுடியின் மேல் மஞ்சம் நிழற்றுகிறது. இந்திரன் மணலால் சிவலிங்கம் செய்து பூசித்த பின், அதனை எடுக்க முயன்ற போது, முடியாமல் போயிற்று. அப்போது அவன் கைகள் இறைவன் திருமேனியில் பொறிக்கப்பட்டு, இன்றும் காணக்கூடியதாக இருப்பதனால் இத்தலம் இப்பெயர் எய்திற்று. தியாகேசர் விழாக்கொள்ளும் மூர்த்தியாக எழுந்தருளி, இந்திரனுக்கு காட்சி கொடுத்தார்.

திருவாரூருக்கு தெற்கில் உள்ள திருநெல்லிக்கா என்னும் தலத்தில் இருந்து 3 கி.மீ. திருத்துறைப்பூண்டிக்கு வடக்கே 10½ கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 122