திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)

இறைவர் : சிவக்கொழுந்தீசர்
இறைவி : ஒப்பிலா நாயகி, இளங்கொம்பன்னாள்

பதிகம் : சுந்தரர் 1
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : திருந்து தீர்த்தம்

சிறிய கோயில். இவ்வூரிலுள்ள தாமரைக்குளத்தில் தீர்த்தம் ஆடினால் குட்டை முதலிய பெருநோய்கள் நீங்கும் என்பர். வயல்வேலை செய்யும் சாதியில் பிறந்த பெரியான் என்ற சிவபக்தர் ஒருநாள் வயல் உழுதுகொண்டு இருக்கும்போது சிவபெருமான் மாறுவேடத்தில் அவனிடம் போய் உணவு கேட்டார். அடையார் அது கொண்டுவர வீட்டுக்குச் சென்றபோது, அந்த வயல் உழுது தினை விதைக்கப்பட்டது. அடியார் திரும்பி உணவு கொண்டு மனையாளோடு அங்கு வந்தபோது, தினை முளைத்து, முற்றி, விளைந்து இருந்தமையைக் கண்டு திருவருளை வியந்தனர். சிவபெருமானும், தேவியாரும் வானத்தில் தோன்றி இருவருக்கும் அருள் புரிந்தனர். அதனால் இவ்வூர் இப்பெயர் பெறலாயிற்று. இந்த வரலாறு கோயிலில் அழகான ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இறைவருக்கு இன்றும் தினை அமுது படைக்கப் படுகிறது.

பயண வசதிகள் உண்டு. கடலூர்-சிதம்பரம் இருப்புப்பாதை வழியில் ஆலம்பக்கம், புதுச்சத்திரம் இருப்புப்பாதை நிலையங்களில் இருந்து கோயில் தனித்தனியே 9 கி.மீ. தூரம். அங்கிருந்து பேருந்தில் செல்லவேண்டும். பேருந்துகள் கோயிலின் திருவாயிலில் சிலநேரம் பயணிகளின் நின்று பின் அப்பால் செல்கின்றனர்.

நடுநாடு : 5