திருக்கண்டியூர் வீரட்டம்

இறைவர் : வீரட்டேசுவரர், பிரமசிரக்கண்டீசர்
இறைவி : மங்களநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தலமரம் : வில்வம்

பெரிய கோயில். மேற்கு பார்த்த சந்நிதி. அட்ட (எட்டு) வீரட்டத்தலங்களுள் ஒன்று. பிரமன் தலையை கொய்த தலம். திருவையாற்றை சுற்றியுள்ள ஏழு ஊர்களில் இது ஐந்தாவது. மாசி மாதம் 13, 14, 15 ம் நாள்களில் மாலையில் ஞாயிற்றின் ஒளி இறைவன் மீது விழுகின்றது. சதாநந்தர் பூசித்த தலம். அவருடைய திருவுருவம் தனியே வழிபட்டு வருகிறது. கோயிலுக்கு எதிரில் 3 கி.மீ. தூரத்தில் திருப்பூந்துருத்தி இருக்கிறது.

தஞ்சை இருப்புப்பாதை  சந்தி நிலையத்தில் இருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலையில் 9 கி.மீ. இங்கிருந்து திருவையாறு 3 கி.மீ. பயண வசதி (பேருந்துகள் பல) உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 12