திருமாகறல்

இறைவர் : அடைக்கலங்காத்தநாதர்
இறைவி : புவனநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

அழகிய பெரிய கோயில். காஞ்சிபுரத்திற்கு தெற்கே 15 கி.மீ. சேயாற்றின் வடக்கில் உள்ளது. மகப்பேறு வேண்டுவோர் இங்கு அங்கப் பிரதிட்டை செய்து, கோயிலை வலம் வருவர். இராஜேந்திர சோழன் துரத்திய உடும்பு இறைவன் திருமேனியைத் தழுவி, உயிர் தப்பியது. மூலலிங்கத்தில் உடும்பின் அடையாளம் இருக்கிறது.

காஞ்சிபுரம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 165 கி.மீ. பேருந்து கிடைக்கும். பயண வசதிகள் உண்டு.

தொண்டைநாடு : 7