திருநள்ளாறு

இறைவர் : தர்ப்பாரண்யேசுவரர்
இறைவி : போகமார்த்த பூண்முலையம்மை
விநாயகர் : சொர்ண விநாயகர்

பதிகம் : சம்பந்தர் 4 + அப்பர் 1 + சுந்தரர் 2 = ஆக 7
தீர்த்தம் : நள தீர்த்தம்

கோயில் பெரிது. சப்த விடங்கத் தலங்களில் ஒன்று. நகவிடங்கர் நடனம் உன்மத்தம். சனிபகவான் வழிபாடு விசேஷம். இவரது சந்நிதி கிழக்கு பார்த்தபடி, அம்பாள் சந்நிதியின் முன் உள்ளது. நளமன்னன் வழிபாட்டுக் கலி நீங்கி, அருள் பெற்ற இடம் என்பர். முன் தர்க்காடாக இருந்த இடத்தில், தர்ப்பைக் கட்டுப்போல் இறைவர் எழுந்தருளி இருப்பதனால், மூர்த்தி இப்பெயர் பெற்றார். சம்பந்தர் மதுரையிலே சமணர்களோடு அனல்வாதம் செய்தபோது, தீயில் இட்ட ஏட்டில் எழுதப்பட்ட தேவார பாசுரம், இங்கு அருளப்பட்ட “போக பார்த்த” என்பதாகும். ஏடு எரியாமல், பச்சையாக இருந்தமையால், பாசுரம் பச்சைப் பதிகம் என்றாயிற்று. ஊருக்கு வடக்கே நள தீர்த்தம் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 52