திருமங்கலக்குடி

இறைவர் : உயிர்கொடுத்த நாயகர்
இறைவி : மங்களநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தலமரம் : கோங்கிலவம்
தீர்த்தம் : மங்கலதீர்த்தம்

சிறிய கோயில். பழையது. ஏயர்கோன் கலிக்காம நாயனார் சுந்தரரோடு பற்று உடையவராய் இருந்து பேறு பெற்ற திருவூர் (அவர் அவதரித்தது திருப்புன்கூருக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவிலுள்ள பெருமங்கலம் என்னும் திருத்தலம்). அரசன் ஒருவனுடைய பொருளைக் கொண்டு அவன் தண்டலாளர் ஒருவர் கோயில் திருப்பணி செய்ய, தன் அனுமதியின்றி அவ் வேலைக்காக தன் செல்வத்தை செலவு செய்தமையால் அவரை தண்டிக்க முயன்றான். தண்டலாளர் அரசன் தண்டனைக்கு அஞ்சி உயிர் நீத்தார். தண்டலாளருடைய சவத்தை திருமங்கலக்குடிக்கு அப்பாலுள்ள திருவியலூருக்கு கொண்டு போகும்படி அரசன் ஆணையிட, தண்டலாளர் மனைவி இவ்வூர் அம்மை மங்களநாயகியை வேண்ட, அவளருளால் தண்டலாளர் உயிர்பெற்று எழுந்தனர் என்பர்.

பயண வசதிகள் உண்டு. ஆடுதுறை இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், திருவிடைமருதூர் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து பயண வசதிகள் பல உண்டு (கும்பகோணம்-மயிலாடுதுறை நெடுஞ்சாலை மார்க்கம்).

சோழநாடு, காவிரி வடகரை : 38