திருஆப்பனூர்

இறைவர் : திருஆப்புடையார், ஆயனூரீசர்
இறைவி : குரவங்கமழ் குழலம்மை, அம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1

கோயில் சிறிது. இராச கோபுரம் இல்லை. வைகை ஆற்றங்கரையில் உள்ளது. சுவாமி, அம்பாள் கோயில்கள் தனித்தனியே உள்ளன. நடேசர், சிவகாமசுந்தரி சிலா விக்கிரகங்களோடு, நந்தி, புலிக்கால், பதஞ்சலி முனிவர்களின் திருமேனிகள் உள. சுவாமி கோயிலின் முன்புறம் 64 தூண்களைக் கொண்ட முக மண்டபம். சுவாமி கோயிலுக்கும், அம்பாள் கோயிலுக்கும் இடையில் வேம்பு, அரசு மரங்கள் செழித்து வளருகின்றன. மரங்களின் அடியில் “வேம்பரசு விநாயகர்” எழுந்தருளி உள்ளார். பிரமோற்சவம் இல்லை. பிரதோஷம், கார்த்திகைத் தினங்கள் விசேடம்.

மதுரை நகரில் இருந்து வடக்கே, வைகை ஆற்றின் வடகரையில் 4 கி.மீ தூரத்தில் உண்டு. பயண வசதிகள் உண்டு.

பாண்டிநாடு : 2