திருவெஞ்சமாக்கூடல்

இறைவர் : விகிர்தேசுவரர்
இறைவி : விகிர்தேசுவரி, மதுரபாஷிணி, பண்ணோர் மொழியம்மை

பதிகம் : சுந்தரர் 1
தீர்த்தம் : குழகனாறு

பெரிய கோயில். அது நிலமட்டத்துக்குக் கீழும், ஊர் மேலும் உள்ளன. முன் பேரூர் ஆயிருந்து, இப்போ சிற்றூர் ஆகிவிட்டது. வெஞ்சன் என்ற அசுரன் அரசாண்ட படியாலும், குழகனாறு, சிற்றாறு என்பன அமராவதியுடன் கலப்பதாலும் (கூடல்) வெஞ்சமாக்கூடல் எனப் பெயர் பெற்றது. கோட்டையின் அடையாளங்கள் காணப்படுகின்றன. குழகனாறு என்னும் சிற்றாறு கோயிலின் மேற்புறம் அண்மையில் ஓடுகிறது. அண்மையில் பலவர்ண ஓவியங்கள் சிற்பங்களோடு பாரிய திருப்பணிகள் நடந்தேறின. மாசி மாதம் 10 நாள் பிரமோற்சவம் நிகழ்கின்றது. சிவபெருமானிடம் பத்தியுள்ள ஒரு கிழவி, சுந்தரரிடம் கொண்ட பேரன்பினால், தன் பிள்ளைகளை அடைவு வைத்து, சுந்தரருக்கு பொன் பெற்றுத் தந்தார் என்பர்.

கருவூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 24 கி.மீ. பயண வசதி சுமாராக உண்டு.

கொங்குநாடு : 5