திருப்பழனம்

இறைவர் : ஆபத்சகாயர்
இறைவி : பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 5 = ஆக 6
தீர்த்தம் : காவிரி

சிறிய கோயில். அப்பர் அப்பூதியடிகளின் சிறப்பினை “பஞ்சிற்காற் சிறகன்னம்” என்று எடுத்துச் சிறப்பித்த தலம். சுமார் 3 கி.மீ தூரத்தில் அப்பூதியடிகளின் திங்களூர் இருக்கிறது. நாவுக்கரசருக்கு அமுது படைக்க வாழைக் குருத்து அரிந்துவரச் சென்ற அப்பூதியின் மகன் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்ட, அவன் இறக்க, அவனுடைய உடலை, “ஒன்று கொலாம்” என்ற பதிகம் பாடி, நாவுக்கரசர் உயிர்ப்பித்த தலம். இங்கு வாழை அதிகம் உண்டு. ஆதலின் கதலிவனம் எனவும் இத்தலத்துக்கு பெயர் உண்டு. இது திங்கள் பூசித்த திருவூர். இங்கு புரட்டாதிப் பங்குனி மாதங்களில், முழு நிலா நாள் அன்றும் (பௌர்ணமி), அதற்கு முன், பின் நாள்களிலும் நிலவின் ஒளி சிவலிங்கத்தின் மீது படிகின்றது. திருவையாற்றிற்கு கிழக்கில் 3 கி.மீ. திருவையாற்றோடு சேர்ந்த இது இரண்டாவது ஆகும்.

சோழநாடு, காவிரி வடகரை : 50