திருஅம்பர்மாகாளம்

இறைவர் : காளகண்டர், மாகாளர்
இறைவி : பட்சநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அரிசொல்லாறு, மாகாள தீர்த்தம்

அம்பர் பெருந்திருக்கோயிலுக்கு மேற்கே 1 கி.மீ தூரத்தில் உள்ளது. அம்பரில் இருந்து அம்பர் மாகாளம் வரும் வழியில், சோமாசிமாற நாயனர் யாகம் செய்த மண்டபம் இருக்கிறது. யாகத் திருவிழா வைகாசி ஆயிலியத்திலன்று நடைபெறுகிறது. நாயனார் வேள்வி செய்த இடத்தில், தியாகேசரும், இறைவியாரும் நீசத்திருமேனியுடன், சகடையும், மதுக்குடமும் கொண்டுவந்த கோலத்தில் இருக்கின்றனர். அம்பன், அம்பாசுரன் என்னும் அரக்கர்களைக் கொன்ற பழிதீர்காளி பூசித்த தலம். எழுந்தருளி இருப்பது பாணலிங்கம். உருவன் சிறிது. காளிகோயில் வெளியில் இருக்கிறது. சோமாசிமாற நாயனார், மனைவியார், சுந்தரர், பரவையார் திருமேனிகள் தியாகேசர் சந்நிதியில், நேர்-எதிர் நோக்கி உள்ளனர்.

பயண வசதிகள் பல உண்டு. மயிலாடுதுறை-திருவாரூர் இருப்புப்பாதையில், பூந்தோட்டம் நிலையத்தில் இருந்து 2 கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 55