திருஆடானை

இறைவர் : ஆடானைநாதர், ஆதிரத்தினேசுவரர்
இறைவி : அம்பாயிரவல்லி, சிநேகவல்லிநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வில்வம்

பெரிய அழகான கோயில். கருங்கல் திருப்பணி. 9 நிலை இராச கோபுரம். வருணகுமாரன், வாருணி துர்வாச முனிவர் இட்ட சாபத்தால், ஆட்டுத் தலையும், யானை உடலும் கொண்டு பெற்ற வடிவம், சாபவிமோசனம் அடைந்தமையால், இத்தலம் (திரு + ஆடு + ஆனை) என்ற பெயர் பெற்றது. நல்ல சிற்ப வேலைபாடுகள் கொண்டுள்ள அழகான மண்டபம் உண்டு.

திருச்சி-இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் இருந்து பேருந்தில் செல்ல வேண்டும். பயணத்துக்கு காரைக்குடி, பரமக்குடி, இராமநாதபுரம், அறந்தாங்கி முதலிய இடங்களில் இருந்து பேருந்துகள் பல உண்டு.

பாண்டிநாடு : 9