திருஅவளிவணல்லூர்

இறைவர் : தம்பரிசறிவார், சாட்சிநாயகர்
இறைவி : சௌந்தரநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2

அளவான கோயில். இங்கு கோயிலில் பூசனை செய்த ஆதிசைவர் ஒருமுறை காசியாத்திரை போனார். அவர் மீண்டும் வந்தபோது, அவர் மனைவி பெருநோயால் பிடிக்கப்பட்டு, உடல் நலம் இழந்து, கண் பார்வை இழந்திருந்தாள். அவளுடைய தங்கை மணம் முடித்து, அழகுடன் இருந்தாள். அந்தணர் இளையவளே தன் மனைவி என வாதிட்டார். அபோது சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து, “அவள்தான் இவளே” என்று காட்டினார். அதனால் இவ்வூர் அப்பெயர் கொண்டது. பின்னர் மூத்தாள் கோயில் தீர்த்தத்தில் முழுகி, கண் பார்வையும், அழகும் பெற்றனள் என்பர்.

சாலியமங்கலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 11 கி.மீ. அரதைப்பெரும்பாழியில் இருந்து 2 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 100