திருச்சிவபுரம்

இறைவர் : சிவபுரநாதர்
இறைவி : சிங்கராவல்லி

பதிகம் : சம்பந்தர் 3 + அப்பர் 1 = ஆக 4
தலமரம் : செண்பகம்

அளவான கோயில். திருமால் பன்றியாக சிவபெருமானை பூசித்த தலம். இக்குறிப்பு சம்பந்தர் பாடலில், “வெண்பன்றி முன்னாள் சென்றடி வீழ் சிவபுரமே” என்று வருகிறது. இவ்வரலாறு கோயில் சுற்று மதிலிலும் சித்திரிக்கப்பட்டுள்ளது. இங்கு கார்த்திகை சோமவாரம் மிகச்சிறப்பு. நடராஜர் திருமேனி மிக அழகு. அதுவே திருடப்பட்டு, அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அரசு முயற்சியால் மீண்டும் இத்தலத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கும்பகோணம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 5 கி.மீ. எல்லா பயண வசதிகளும் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 67