திருவேதிக்குடி

இறைவர் : வேதபுரீசர்
இறைவி : மங்கையர்க்கரசி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2

அளவான கோயில். பழையது. திருவையாற்றைச் சுற்றியுள்ள ஏழு ஊர்களில் (சப்த ஸ்தானங்கள்) நான்காவது. வேதங்கள் வழிபட்டதனால் வேதிகுடி என்று பெயர் ஏற்பட்டது. இறைவர் வாழைமடுவின் தோன்றியமையால் வாழைமருநாதன் எனவும் பெயர் பெற்றார். பங்குனி 13, 14, 15 – ம் நாள்களில் ஞாயிற்றின் ஒளி இறைவன் மேல் விழுகிறது. சூரிய பூசை சிறப்பாக நடைபெறும்.

தஞ்சாவூர் இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ செல்ல வேண்டும். இங்கிருந்து சோற்றுத்துறை (சப்த ஸ்தானங்களில் ஐந்தாவது) 3 கி.மீ சேரலாம். பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 14