திருத்துருந்தி (குத்தாலம்)

இறைவர் : உக்ரவேதீசுரர், உத்தரவேதேசுவரர், சொன்னவாறறிவார்
இறைவி : அமிர்தமுகிழாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3
தலமரம் : குற்றால், உத்தாலமரம்
தீர்த்தம் : காவிரி சுந்தர தீர்த்தம்

கோயில் பெரிது. 5 நிலை இராசகோபுரம். மேற்கு பார்த்த சந்நிதி. இத்தலத்தின் காவிரியின் வடகரையில் உள்ள (23 தலமாகிய) வேள்விக்குடியில் சிவபிரான் உமையம்மையாரை மணப்பதன் முன் பிரமச்சாரியாய் எழுந்தருளி வேதம் ஓதினார் ஆதலின் உத்தவேதேசுரர் எனப் பெயர் வழங்கப்படுகிறது. தாம் அருளிய வேதத்தை தாமே சொன்னமையால் சொன்னவாறு அறிவார் எனவும் வழங்கப்படுகிறார். ஆளுடைய நம்பிகள் திருவொற்றியூரில் தம் இரு கண்களையும் இழந்து, காஞ்சி சென்று ஒரு கண்ணைப் பெற்று, திருவாரூரை நோக்கிச் செல்லும்போது இங்கு வந்தார்கள். அப்போது அவர்கள் வடகுளத்தில் குளிக்க, அவர் திருமேனியை பீடித்த புதுப்பிணி நீங்கிப்போயிற்று. நம்பிகளது திருவுருவம் இக்குளக்கரையில் எழுந்தருளச்செய்து வழிபடப்படுகிறது. இந்த திருத்துருந்தியும், வேள்விக்குடியும் ஒரு தலம். இறைவனார் பகலில் திருத்துருந்தியிலும், இரவில் வேள்விக்-குடியிலும் எழுந்தருளி இருப்பர் என்பர். திருத்துருந்தியையும், திருவேள்விக்குடியையும் இணைத்தே சம்பந்தரும் சுந்தரரும் பாடியுள்ளனர்.

பயண வசதிகள் உண்டு. குத்தாலம் இருப்புப்பாதை நிலையம், மயிலாடுதுறை இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்தில் இருந்தும், தஞ்சை மார்க்கமாக பல பேருந்துகள் உண்டு.

காவிரி தென்கரை : 37