திருப்பருப்பதம்

இறைவர் : பருப்பதநாதர், ஸ்ரீசைலேசுவரர், மல்லிகார்ச்சுனர்
இறைவி : பருப்பதநாயகி, பிரமராம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3

பெரிய மதில்களை உடைய பெரிய கோயில். நந்திதேவர் சிவபெருமானை மலைவடிவில் தாங்கிக் கொண்டிருக்கிறார். 12 ஜோதிலிங்கங்களில் இங்கு இருப்பதும் ஒன்று. ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கிறது. கோயிலினின்றும் சிறிது தூரத்தே பள்ளத்தாக்கில் கிருஷ்ணா நதி (பாதாள கங்கை) ஓடிக் கொண்டிருக்கிறது. வெகு புராதன வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம். இங்கே சிவராத்திரி மிகுந்த பக்தி பூர்வமாக அனுட்டிக்கப் படுகிறது. அம்மை-அப்பருக்கு நித்தியம் மாலையில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது (நித்திய கல்யாணி). சேவார்த்திகள் மூலவரைத் தொட்டு பூசிக்கலாம். வீரசைவத் தலம். அவர்கள் தங்குவதற்கு வசதிகள் பல உண்டு. மலைகளுக்கு இடையே பசுமையான சோலை, தோப்புக்களின் நடுவே கோயில் அழகாக அமைந்திருக்கிறது. வழி நெடுகிலும் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து, அனுபவித்துக் கொண்டு செல்லலாம். ஸ்ரீசைலம், மல்லிகார்ஜனம், சீபற்பதம் முதலிய  பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு.

நந்தியால், ஆதம்கூர், பெத்தசெருவுக்கு கால் நடையாகவும், டோலி, குதிரை முதலியவற்றில் பயணம் செய்ய வேண்டும். திருக்காளத்தி, திருப்பதி முதலிய தலங்களில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.

வடநாடு : 1