திருச்சத்திமுத்தம்

இறைவர் : சிவக்கொழுந்தீசர், சக்திவனேசுவர சுவாமி
இறைவி : பெரியநாயகி, பிருகந்நாயகி

பதிகம் : அப்பர் 1

கோயில் பெரிது. பெரிய செங்கல் சுற்றுமதில். கும்பகோணம் சாலையின் தெற்கே பட்டீச்சுரம் என்ற பாடல் பெற்ற தலமும், வடக்கே திருச்சத்திமுத்தமும் ஆக, இரண்டும் அண்மையில் உள்ளன. ஆனி முதலாம் திகதி பட்டீச்சுரத்தில் இருந்து பல்லக்கில் சுவாமியும், முத்துப்பந்தரில் சம்பந்தரும் எழுந்தருளி, காட்சி கொடுப்பார். பராசக்தி இறைவனுக்கு முத்தம் கொடுத்த தலம். இத்தலத்தில் நாவுக்கரசர், “பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை”, “இம்மை உன்தாள் என் நெஞ்சத்தெழுதிவை” எனப் பாட, இறைவர் அவரை நல்லூருக்கு அழைத்து, அங்கே அவர் விருப்பத்தை நிறைவு செய்தார். திருநல்லூரை இவ்விரு தலங்களில் இருந்து, பேருந்தில் சென்று அடையலாம்.

கும்பகோணத்துக்கு தென்-மேற்கே 6 கி.மீ. மயிலாடுதுறை-தஞ்சாவூர் இருப்புப்பாதையில், தாராசுரத்தில் இருந்து 2 கி.மீ. பயண வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 22