திருமுக்கீச்சரம் (உறையூர், பஞ்சவர்ண சுவாமி கோயில்)

இறைவர் : ஐவண்ணர், பஞ்சவர்ணேசுவரர்
இறைவி : காந்திமதி

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சிவதீர்த்தம்

பெரிய கோயில். வெளியே மொட்டைக் கோபுரம். உள்ளே 3 நிலைக் கோபுரம். சோழமன்னர்கள் முடிசூடிக்கொள்ளும் 5 நகரங்களில் இதுவும் ஒன்று. நடராஜர் சந்நிதிக்கு நேரே புகழ்ச்சோழ நாயனார் திருமேனி உண்டு. அவருடைய தலம். கோச்செங்கட்சோழ நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் வீடுபேறு அடைந்த தலம். மூவேந்தர்களும் சேர்ந்து தொழுத சிறப்புடைய திருப்பதி. உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வர்ணமாகக் காட்சி கொடுத்தார். யானைக்கோழி சண்டையிட்டு வென்றமையால் இத்தலத்துக்கு கோழியூர் என்றும் பெயருண்டு.

திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 1 ½ கி.மீ. பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 5