திருப்பரங்குன்றம்

இறைவர் : பரங்கிரிநாதர்
இறைவி : ஆவுடைநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + சுந்தரர் 1 = ஆக 2

கோயில் பெரிது. மலையை குடைந்து ஆக்கப்பட்ட கோயில். பரங்குன்றின் அடிவாரத்தில் இருந்து படிகள் வழி உயர்ந்து செல்கின்றது. மூலவர் தரிசனத்துக்கு ஏறித்தான் செல்லவேண்டும். முருகனுடைய முக்கிய ஆறு படை வீடுகளில் முதலாவது. அரக்கரை அழித்து, அமரரைக் காத்தமையால் தேவேந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்துவைத்த தலம். முருகனுக்கு அருகில் தெய்வானை அம்மையும், நாரதரும் நிற்கின்றனர். சரவணப்பொய்கை கிழக்கே உண்டு. காசி தீர்த்தம் மலைமேல் உண்டு. மலையின் அடிவாரச் சுற்றளவு 3 கி.மீ. மலையை வலம்வந்து வணங்குதல் பெரும் புண்ணியம். திருமுருகாற்றுப்படையை அருளிய நக்கீரர் வாழ்ந்து, பேறு பெற்ற திருவூர். திருச்செங்கோடு போல, இதுவும் சிவத்தலம் ஆயினும், முருகக் கடவுளுக்குத் தான் சிறப்பிடம்.

மதுரைக்கு தென்-மேற்கில் கி.மீ. ரயில், பேருந்து பயண வசதிகள் நிறைய உண்டு.

பாண்டிநாடு : 3