திருவேள்விக்குடி

இறைவர் : கல்யாணசுந்தரேசுவரர், மணவாளேசுவரர்
இறைவி : பரிமளகந்த நாயகி

பதிகம் : சம்பந்தர் 1 சுந்தரர் 2 = ஆக 3

கோயில் சிறிது. 3 நிலை இராச கோபுரம். மேற்கு பார்த்த சந்நிதி. மன்னன் மகன் ஒருவனுக்கு ஒரு பெண்ணை மணம் பேசினார்கள். மணநாளுக்கு முன் பெண்ணின் தந்தை இறந்துவிட, அவளின் உறவினர், அவளை அவனுக்கு கொடுக்க மறுத்தார்கள். அரசன் இறைவனை நோக்கி வழிபாடு ஆற்றினான். இறைவர் அரசனுக்கு இரங்கி, தன் பூதகணங்களை அனுப்பி, திருமணத்தை, வேள்வி இயற்றி செய்து வைத்தார். அக்காரணத்தால் இத்தலம் வேள்விக்குடி ஆயிற்று. திருமணஞ்சேரி, திருஎதிர்கொள்பாடி என்ற பாடல் தலங்கள் அண்மையில் உள்ளன. திருத்துருந்தியும், திருவேள்விக்குடியும் ஒரு தலமாகக் கருதப் படுகின்றன. இறைவர் பகலில் திருத்துருந்தியுலும், இரவில் திருவேள்விக்குடியுலும் எழுந்தருளி இருப்பர்.

கும்பகோணம்-மயிலாடுதுறை மார்க்கத்தில், குத்தலாம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து, வட-கிழக்கு 3 கி.மீ தூரம். பேருந்து, ரயில் பயண வசதிகள் நிறைய உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 23