திருஆக்கூர்

இறைவர் : தான்தோன்றிநாதர், சுயம்புநாதர்
இறைவி : வாள்நெடுங்கண்ணி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2

சிறிய மாடக் கோயில். ஆக்கூர் தலப் பெயர். தான்தோன்றி மாடம் கோயிலின் பெயர். அறுபத்து- மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய சிறப்புலி நாயனார் அவதரித்து, சிவனடியாரை சேவித்து, பெறு பெற்ற தலம். இறைவன் கட்டளைப்படி மன்னன் ஒருவன் 1000 அந்தணர்களுக்கு சமாராதனை செய்ததாகவும், அவர்களுள் ஒருவராக இறைவன் வந்து பங்கு ஏற்றதாகவும், பின்பு அரசனுக்கு காட்சி கொடுத்ததாகவும் சொல்வர். கோயிலிலே “ஆயிரத்திலோருவர்” என்னும் விழாத்திருமேனி தனிச் சந்நிதியில் உள்ளது.

சிதம்பரம்-மயிலாடுதுறை மார்க்கம், சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ மயிலாடுதுறை-தரங்கம்பாடி இருப்புப்பாதையில், ஆக்கூர் நிலையத்துக்கு அன்மையில் உள்ளது. ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 46