திருந்துதேவன்குடி

இறைவர் : கர்க்கடேசுவரர் (கற்கடகம் – நண்டு)
இறைவி : அருமருந்தம்மை

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : பங்கய தீர்த்தம்

இவ்வூர் இப்போது இல்லை. கோயில் தனியே வயல்களின் நடுவே சிதைந்த நிலையில், பாழ்பட்டுக் கிடக்கிறது. நண்டு பூசித்த தலம். ஒரே நிறம் உடைய 10 பசுக்களின் பால் 10 கலம் சுவாமிக்கு அபிஷேகம் செய்தல், சிவலிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள துவாரத்தின் ஒரு பொன்வண்டு வெளியே வந்து ஊர்வதைக் காணலாம். சிவலிங்கத்தை ஒரு நோயுற்ற மன்னன் இரண்டாக வெட்டினான். அச்சிவலிங்கம் வெட்டுப்பட்ட நிலையில் காட்சி தருகிறது.

கும்பகோணத்தில் இருந்து கிழக்கில் 8 கி.மீ தூரம். பயண வசதி அற்பம்.

சோழநாடு, காவிரி வடகரை : 42