திருமாற்பேறு

இறைவர் : மால்வணங்கீசர், மணிகண்டீசர்
இறைவி : கருணைநாயகி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 4 = ஆக 6
தீர்த்தம் : அரி தீர்த்தம்
தலமரம் : வில்வம்

அளவான கோயில். 5 நிலை இராச கோபுரம். குபன் என்னும் அரசனுக்காக திருமால் ததீசி முனிவருடன் போர் செய்து, சக்கர ஆயுதத்தை இழந்தார். சிவபெருமான் சலந்தராசுரனைக் கொன்ற சக்கரத்தைப் பெற ஆயிரம் மலர்களைக் கொண்டு அர்சிக்கும்போது, ஒன்று குறைய, தன் கண் மலரை இடந்து அர்ச்சித்து, அச் சக்கரத்தையும், செங்கமலக்கண்ணன் என்னும் பெயரையும் பெற்றார். மூலவருக்கு எதிரில் திருமால் கூப்பிய கைகளுடன் நிற்கிறார். நந்தியெம்பெருமானும் நின்ற கோலத்தில் நிற்கிறார். இறைவர் தீண்டாத் திருமேனி. குவளை மலர் சாத்தி, திருமுழுக்காட்டுதல் நிகழ்கின்றன.

பயண வசதிகள் பல மிக உண்டு. காஞ்சியில் இருந்து 12 கி.மீ. அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்.

தொண்டைநாடு : 11