திருப்புனவாயில்

இறைவர் : பழம்பதிநாதர், விருத்தபுரீஸ்வரர்
இறைவி : பரங்கருணைநாயகி, பிருகநநாயகி, பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + சுந்தரர் 1 = ஆக 2
தலமரம் : புன்னை

பெரிய கோயில். 5 நிலை இராச கோபுரம். நந்தி, மூலலிங்கம் பெரியன. ஆவுடையாரும் பெரிது. படிகளில் ஏறி நின்று மேலிருந்து அபிஷேகம். சிவக்கொழுந்தாகிய மூலவருக்கு 3 முழத் துணியும், ஆவுடையாரைச் சுற்ற 30 முழத் துணியும் வேண்டும். பாண்டிநாட்டுப் பாடல் பெற்ற 14 தலங்களைக் குறிக்க 14 இலிங்கங்கள் உண்டு. இந்த 14 இலிங்கங்களையும் வழிபட்டால் பாண்டிநாட்டில் உள்ள பாடல் பெற்ற திருப்பதிகள் பதின்னான்கையும் தனித்தனியே சென்று வழிபட்ட பயன் கிடைக்கும் என்பர். உற்சவம் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெறும். இது கடற்கரை ஊராக உள்ளது. கடலாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. கோயில் சிறிய அளவில் ஆயினும், தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழேச்சரம் கோயில் போல், அவற்றை நினைவு படுத்திக்கொண்டு கம்பீரமாக நிற்கிறது. ஊருக்கு அருகில் பாம்பாறு பாம்பு போல் வளைந்து, வளைந்து ஓடுகிறது.

பயண வசதிகள் உண்டு. திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) இலிருந்து 35 கி.மீ. காரைக்குடியில் இருந்து 60 கி.மீ. பேருந்து சேவை மிகுதியாக உண்டு.

பாண்டிநாடு : 7