திருக்கொட்டையூர் கோடீச்சரம்

இறைவர் : கோடீசுவரர்
இறைவி : பந்தாடுநாயகி
விநாயகர் : கோடி விநாயகர்

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : கோடி தீர்த்தம்

அளவான கோயில். கீழைக் கொட்டையூரில் இருக்கிறது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய ஏரண்ட முனிவர், இங்கு வெளிப்பட்டார் என்பர். அவருடைய திருவுருவம் கோயிலில் இருக்கிறது. இத்தலம் முன் ஆமணக்காடாக இருந்தது. இவ்விறைவர் ஆமணக்கஞ் செடியின் கீழ் இருந்து தோன்றியமையால் கொட்டையூர் என்றும், சோழமன்னனுக்கு ஒரே உருவத்தில் கோடிலிங்கக் காட்சி தந்தமையால் ஆலயத்துக்கு கோடீச்சரம் என்றும் பெயர்கள் உண்டாயின. பெரிய இலிங்கத்தில், பலாக்காயில் முள்கள் இருப்பதுபோல், பல இலிங்கங்கள் உள்ளன.

கும்பகோணத்துக்கு மேற்கே 3 கி.மீ. பிரசித்தி பெற்ற முருகன் தலமாகிய இருந்து 3 கி.மீ தூரம். ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 44