திருஇன்னம்பர்

இறைவர் : எழுத்தறிநாதர்
இறைவி : கொந்தார் பூங்குழலி, பூங்கொம்பு நாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 4 = ஆக 5
தீர்த்தம் : ஐராவதம்
தலமரம் : பலா, சண்பகம்

கோயில் சிறிது. அகத்தியர் வழிபட்டு, இலக்கணம் பயின்ற தலம். கருவறை விமானம் தூங்கானை மாட அமைப்பு. அம்மன் சந்நிதி இரண்டு உண்டு. சுகந்தகுந்தாள் அம்பாள் தனிக்கோயில் பெரிய கோயிலுக்கு வெளியே உண்டு.

கொட்டையூருக்கு வட-மேற்கே 3 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்துக்கு மேற்கே 6 கி.மீ தொலைவிலும் இருக்கிறது. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 45