திருமுருகன்பூண்டி

இறைவர் : முருகாவுடையார், முருகநாதேசுவரர்
இறைவி : முயங்குபூண் முலையம்மை, ஆவுடை நாயகி

பதிகம் : சுந்தரர் 1
தலமரம் : மாதவி (குருக்கத்தி)
தீர்த்தம் : மகாமக தீர்த்தம்

கோயில் சிறிது. சூரசங்காரத்தின் பின் முருகன் பூசித்த பதிகளுள் இது ஒன்று. இவருடைய சந்நிதி தனியே உண்டு. பிரமகத்தி, சித்தப்பிரமை முதலிய மனநோய்களால் பீடிக்கப் பெற்றவர் இங்கு வந்து, இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் முழுகி, சுவாமியை வழிபட்டால் நோய் நீங்கப்பெறுவார் என்பர். கோயிலினுள்ளே முருகன் வேலால் அமைத்த சரவணப் பொய்கை உண்டு. சேரமான் பெருமான் நாயனார், நம்பியாரூரருக்கு தந்த பொருள்களை சிவபூதங்கள் வேறு வடிவத்தில் வந்து அபகரிக்க, நம்பிகள் பதிகம் பாடி, அவற்றை திரும்பப் பெற்ற திருத்தலம். இங்கு நடேசப்பெருமான், துர்வாசர் முதலியோருக்காக பிரம்ம தாண்டவம் ஆடிய சந்நிதி தனியே உண்டு. நம்பிகள் பொருளை பறிகொடுத்த செய்தியை ‘கூ கூ’ என்று அழைத்த தன்மையால், அவர் கூப்பிடு விநாயகர் எனப்பட்டவர். தனிச் சந்நதியில் உள்ளார்.

திருப்பூர்-அவிநாசி நெடுஞ்சாலையில் கி.மீ. திருப்பூரிலிருந்தும், அவிநாசியிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.

கொங்குநாடு : 2