திருச்செம்பொன்பள்ளி (திருச்செம்பொன்னார் கோயில்)

இறைவர் : செம்பொன்பள்ளிநாதர், சொர்ணபுரீசர்
இறைவி : சுகந்தவனநாயகி, மருவார்குழலி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 2 = ஆக 3
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : வீரபத்திர தீர்த்தம்

அளவான கோயில். தக்கசங்காரத்தின் பொருட்டு வீரபத்திர தேவர் அவதரித்த தலம். இறந்தார் எலும்புகள் இங்கு காவிரியில் இட்டால், அவை சிவபூசைக்கு உரிய பூமரங்களாய் முளைத்து, இறைவருக்கு உரிய பூக்களைத் தரும் என்பர். மாடக் கோயில். வில்வமரத்தின் கீழேயும் சிவலிங்கம் உளது. அம்பாள் சந்நிதி மேற்கு பார்த்தபடி. ஒற்றைக்கால் மண்டபம் ஒன்றில் விநாயகர். தஷிணாமூர்த்தி சந்நிதிக்கு எதிரே பெரிய நாகலிங்க மரம் பூக்களை சொரிந்துகொண்டே இருக்கிறது.

திருநனிப்பள்ளியிலிருந்து 4 கி.மீ. மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ. பயண வசதிகள் பல் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 42