திருவன்பார்த்தார் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)

இறைவர் : பனங்காட்டீசர், தாளபுரீசுரர், கிருபாதேசுவரர்
இறைவி : அமிர்தவல்லி, தூலகோமாளபதாம்பாள், கிருபாநாயகி

பதிகம் : சுந்தரர் 1
தலமரம் : பனை
தீர்த்தம் : சடாகங்கை

அளவான கோயில். இராசகோபுரம் இல்லை. இரண்டு மூலவர்கள். அரைவட்டவடிவில் கிழக்கே இரண்டு கருவறைகள். ஒரு கருவறையில் அகத்தியர் பூசித்த தலபுரீசுவரர் (இறைவி அமிர்தவல்லியம்பாள்). மற்றதில் புலத்தியர் பூசித்த கிருபாநாத சுவாமி (இறைவி கிருபாநாயகி அம்பாள்). அம்பாள் சந்நிதிகள் சதுர அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ளன. இரண்டு அம்பாள் சந்நிதிகளுக் கிடையில் பள்ளியறை. பிரம்மோற்சவம் மாசிமகத்தை ஒட்டி 10 நாள் நிகழும். கோயிலைச் சுற்றி வேம்பு, பனை மரங்கள் அதிகம். நன்செய்கை வயல்களைக் கொண்ட செழிப்பான மருதநிலம். வன்பாக்கதில் இறைவர் சுந்தரருக்கு கட்டுச்சோறு வழங்கியதாக வரலாறு உண்டு.

காஞ்சிபுரத்திலிருந்து 20 கி.மீ. பேருந்து பயண வசதிகள் உண்டு. சிறுது தூரம் நடக்கவேண்டும்.

தொண்டைநாடு : 9