திருநாரையூர்

இறைவர் : நாரையுர் நம்பி, சௌந்தரேசுவரர்
இறைவி : திரிபுரசுந்தரவல்லி

பதிகம் : சம்பந்தர் 3 + அப்பர் 2 = ஆக 5
தலமரம் : புன்னை

சிறிய கோயில். நாரை பூசித்து, பேறு பெற்ற தலம். சிதம்பரம் நடேசர் திருக்கோயிலில் பாதுகாக்கப் பட்டிருந்த தேவாரத் திருமுறைகளை, சிவபாதசேகரன் ஆகிய இராசராசன் வெளிக்கொணர விரும்பியபோது, அவருக்கு துணையாய் இருந்த ஆதிசைவராகிய நம்பியாண்டார் நம்பிகள் பிறந்து, வாழ்ந்து, பேறு பெற்ற திருவூர். அவருடைய திருமேனி, சுவாமி கோயிலுக்கு எதிரில், தனிக்கோயிலில் எழுந்தருளப் பெற்றுள்ளது. அவரால் வழிபடப் பெற்ற பொல்லாப் பிள்ளையார் திருக்கோயில் இப்போது திருப்பணி செய்யப்பெற்று, நல்ல நிலையில் உள்ளது.

சிதம்பரத்துக்கு தென்-மேற்கே, மன்னார்குடி செல்லும் வழியில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 33