திருக்கொள்ளம்பூதூர் (செல்லார், திருக்களம்பூதூர்)

இறைவர் : வில்வவனேசுவரர்
இறைவி : சௌந்தராம்பிகை
விநாயகர் : வலம்புரி விநாயகர்

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வில்வம்

அளவான கோயில். கூவிளம்பூதூர் என்பது கொள்ளம்பூதூர் ஆயிற்று. கூவிளம் – வில்வம். இவ்வூருக்கு அருகில் வெட்டாறு ஓடுகிறது. இதனை முள்ளியாறு, அகத்தியர் காவேரி என்றும் கூறுவார். சம்பந்தர் அடியார்களுடன் இங்கு வந்தபோது, ஆறு பெருக்கெடுத்தது. ஆற்றைக் கடக்க பல வள்ளங்கள் இருந்தும், செலுத்துவார் இல்லாமையால், அடியார்களுடன் வள்ளங்களில் ஏறி, பதிகம் பாடி, மறுகரை அடைந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியை சித்திரிக்கும் விழா ஆண்டுதோறும் ஐப்பசி அமாவாசையில் நிகழ்கிறது.

திருவாரூர்-நீடாமங்கலம் இருப்புப்பாதையில், நீடாமங்கலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 7 கி.மீ. கொரடாச்சேரியில் இருந்து 5 கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 113