திருச்சோபுரம் (தியாகவல்லி)

இறைவர் : சோபுரநாதர்
இறைவி : சோபுரநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சோபுரதீர்த்தம்

கோயில் சிறிது. சுற்றிலும் மணல் குன்றுகளும், அண்மையில் கடலும், உப்பங்கழியும் உண்டு. முதல் குலோத்துங்க சோழமன்னனுடைய பட்டத்துத் தேவியாகிய தியாகவல்லி தேவி திருப்பணி செய்தமையால் தியாகவல்லி எனப் பெயர் உண்டாயிற்று. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் இவ்விடம் மண்மாரியால் மூடப்பட்டு, பின் துறவியர் இருவர் இக்கோயிலைக் கண்டுபிடித்து, திருப்பணி செய்யப்பட்டமையால், “தம்பிரான் கண்ட தலம்” என்ற பெயரும் இதற்கு உண்டு.

கடலூர் இருப்புப்பாதை நிலைய சந்திப்பில் இருந்து ஆலம்பக்கம் இருப்புப்பாதை நிலையம் வரை 3 கி.மீ. ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு. ஆலம்பக்கத்துக்கு அப்பால், உப்பங்கழியை வள்ளத்தில் கடந்து, பின் கால் நடையாக செல்லவேண்டும். பயணம் சிறிது சிரமம்.

நடுநாடு : 6