திருத்திலதைப்பதி

இறைவர் : முத்தீசுவரர்
இறைவி : பொற்கொடி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்

கோயில் சிறிது. மதுமுத்தம் என்பது கோயிலின் பெயர். சிதலைப்பதி என்பது ஊரின் பெயர். ஊரிலி இருந்து கோயில் 1 கி.மீ தூரம். இராம-இலட்சுமணர்கள் தந்தை தசரதனுக்கும், சடாயுவுக்கும் திலதர்ப்பணம் செய்த தலம் (திலம் – எள்ளு). இங்கு பிதிர்களுக்கு திலதர்ப்பணம், சிராத்தம் முதலிய கிரியைகள் செய்தல் பெரும் புண்ணியமாம். காசி மன்னன் ‘சித்தொசி’ இவற்றை இங்கே செய்தார். இவர் உருவம் கோயிலினுள் இருக்கிறது.

மயிலாடுதுறை-திருவாரூர் மார்க்கம், பூந்தோட்டத்தில் இருந்து மேற்கே 2 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 58