திருவாஞ்சியம் (வாஞ்சிநாத சுவாமி கோயில்)

இறைவர் : வாஞ்சியநாதர், வாஞ்சியத்தடிகள்
இறைவி : வாழவந்தநாயகி, மங்களநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3

பெரிய கோயில். 5 நிலை இராச கோபுரம். உள் கோபுரம் 3 நிலை. கோயில் சுற்றில் தென்னந்தோப்பு. சந்தன மரமும் உண்டு. உற்சவம் ஆடிப் பூரம், கார்த்திகை ஞாயிறு. புத்தாற்றில் வடகரையில் கோயில் இருக்கிறது. தம்மை விட்டுப்போன திருமகளை, திருமால், சிவனைப் பூசித்து அடைந்த தலம். இங்கு இறப்பவர்களுக்கு இயம வாதலை இல்லை. கோயிலில் யமனுக்கு தனிச் சந்நிதியும், இறைவனுக்கு யமவாகனமும் உள்ளன. காசிக்கு சமானமான தலம்.

மயிலாடுதுறை-திருவாரூர் மார்க்கத்தில், நன்னிலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 10 கி.மீ. பயண வசதிகள் உண்டு. சிறிது தூரம் சாலையில் நடந்து செல்ல வேண்டும். வழியில் 2 கி.மீ தூரத்தில் கொண்டீச்சரம் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 70