திருவலிதாயம் (பாடி)

இறைவர் : வலிதாயநாதர்
இறைவி : தாயம்மை, ஜகதாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : பாதிரி

கோயில் சிறிது. சென்னைப் பட்டினத்துக்கு மேற்கே 14 கி.மீ. விராயகர், பிரம்மகுமாரிகளான கமலை, வல்லி ஆகியவர்களை திருமணம் செய்த திருவூர். கருவறை விமானம் கஜபிரஷ்டம். வலியன் என்னும் கரிக்குருவி வழிபட்டு பேறு பெற்றதினால் வலிதாயம் என்னும் பெயர் உண்டாயிற்று. திருமயிலை, திருவான்மியூர், திருவேற்காடு, திருவிற்கோலம், திருஇலம்பையின்கோட்டூர், திருவூறல், திருவாலங்காடு, திருவெண்காடு, திருப்பாசூர், வடதிருமுல்லைவாயில், திருவொற்றியூர் என்னும் 11 தலங்களும் இத்தலைத்தை சுற்றி மாலையாக அமைய, திருவலிவலம் நாயகமாக அமைந்துள்ளது இத்தலத்துக்கு ஒரு சிறப்பு. கோயிலினுள்ளே நன்னீர் கிணறு ஒன்று உண்டு. கிராம மக்கள் வந்து நீர் மொண்டு செல்வர்.

சென்னை-ஜோலார்பேட்டை இருப்புப்பாதையில் குறட்டூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 1 கி.மீ. ரயில், பேருந்து வசதிகள் நிறைய உண்டு.

தொண்டைநாடு : 21