திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

இறைவர் : வர்த்தமானீச்சுரர், வர்த்தமானீச்சுவரலிங்கம்
இறைவி : கருந்தாட்குழலியம்மை

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

இது, திருப்புகலூர் பெருங்கோயிலுடன் இணைந்து, அதற்கு வடக்கே, வர்த்தமானலிங்கம் எழுந்தருளி உள்ள கோயிலாகும். இங்கே முருகநாயனார் நியப்படி பூ கொய்து, பலவித மாலைகள் இறைவர்க்கு சாத்தி, திருப்பெருமண நல்லூரிலே ஞானசம்பந்தருடைய திருமணத்தை சேவித்து, சிவபதம் எய்தியவர். சம்பந்தரால் “குறிப்பறி முருகன் செய்கோளம் கண்டு கண்டு கண் குளிர” என்றும், “முருகன் முப்போதும் செய் முடிமேல் வாச மாமலர் உடையார்” என்றும் பாடல்களில் பாராட்டப் பெற்று, சிறப்பிக்கப் பட்டவர். இவருடைய திருவுருவம் திருப்பூங்கூடையுடனும், திருமாலைத் தொண்டு செய்யும் கோலத்துடனும் சாந்நித்தியமாக எழுந்தருளி உண்டு. இத்தலத்தை அவர் தம் ஆன்மார்த்த தலமாகக் கொண்டு வணங்கி வந்தவர்.

பயண வசதிகள் பல உண்டு. நன்னிலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கி.மீ. மயிலாடுதுறை, வேதாரணியம் முதலிய இடங்களில் இருந்து பேருந்துகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 76