திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்

இறைவர் : மடந்தைபாகர், நாகேசுவரசாமி
இறைவி : பிரகந்நாயகி, பெரியநாயகி

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : மகாமகக்குளம்

கோயில் பெரிது. சோழர் திருப்பணி. நாகேசுவரர் கோயில் எனவும் வழங்கப்படுகிறது. ஆனந்த தாண்டவ மூர்த்தி அழகாக, தனிக்கோயிலில் எழுந்தருளி உள்ளார். சிவகாமி அம்பாள் திருக்கரங்களில் தாளம் ஏந்தி உள்ளார். இறைவன் திருக்கூத்து ஆட, அதற்கேற்ப தாளம் போடுகிறார் போலும். சித்திரை மாதம் 11, 12, 13 -ம் நாள்களில் கதிரவன் ஒளி இறைவன் திருமேனியில் விழுகின்றது.

கும்பகோணம் கும்பேசுரர் கோயிலுக்கு கிழக்கே 1 கி.மீ தூரம். பயண வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 27