திருவேற்காடு

இறைவர் : வேதபுரீசர், வேற்காட்டீசர்
இறைவி : வேற்கண்ணம்மை

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வெள்வேலமரம்

கோயில் சிறிது. இராச கோபுரம் இல்லை. சோழர் காலத்து கற்றளி (கற் கோயில்). தூங்கானை மாடம். அகத்தியர் கயிலைத் திருமணக் காட்சி தரிசித்து. முருகன் வேலாயுதம் பெற்று வேலாயுத தீர்த்தம் உண்டாக்கியது. அறுபத்து-மூவரில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருத்தலம். அவருக்கு கோயிலின் உள்ளே தனிச் சந்நிதி உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் மையமாக இருக்க, ஏனைய கிரகங்கள் சூரியனைச் சுற்றி வட்டமாக உள்ளன. அண்மையில் உள்ள திருவேற்காட்டு அம்பாள் கோயில், அளவில் பெரிதாயும், பிரபல்யமாயும் உள்ளது. இவ்வூரில் பாம்பு யாரையும் தீண்டுவதில்லை. சூரனை வென்ற பின், முருகன் இங்கு பூசனை செய்தார். முருகன் சந்நிதியில், முருகனுக்கு முன், பழைய இலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. திருவேற்காட்டு வாலாம்பிகையை காலையிலும், திருவலிதாயம் சகதாம்பிகையை உச்சிக்காலத்திலும், திருவொற்றியூர் வடிவாம்பிகையை மாலையிலும் வழிபடுதல் சிறப்பு.

சென்னைக்கு தெற்கே 20 கி.மீ. பயண வசதிகள் பல உண்டு.

தொண்டைநாடு : 23